Wednesday, October 7, 2009

குவிக் அண்ட் ஸ்பைசி மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள்:
=========================
நருக்கிய மாங்காய் துண்டுகள் - ஒரு கப்
ஊறுகாய் தூள் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கடுகு - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால்  டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========

* முதலில் ஊறுகாய் பொடி தயார் செய்து கொள்ளவும்.ஊறுகாய் பொடி செய்வதற்கு ஆறு மிளகாய் வற்றல் ,கால் டீஸ்பூன் பெருங்காயம்,கால் டீஸ்பூன் பூண்டு பொடி,நான்கு கறிவேப்பிலை இலை எல்லாத்தையும் மிக்சியில் பொடி பண்ணி கொள்ளவும்.(வறுக்க கூடாது)

* பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு,வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் கடுகு சேர்த்து பொரிந்ததும் ஊறுகாய் பொடி சேர்த்து  வறுத்து மாங்காய் சேர்த்து ஒரு நொடி கிளறி
இறக்கவும்.
 

* பொடித்து வைத்துள்ள கடுகு வெந்தய பொடி கால் டீஸ்பூன் சேர்த்து கிளறவும்.சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி .

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

22 comments:

S.A. நவாஸுதீன் said...

உங்க ப்ரெசண்டேசன் பார்த்தாலே உமிழ்நீர் சுரக்க ஆரம்பிச்சிடுது போங்க!

Chitra said...

My mom makes like this..Drooling :)

Balakrishna Saraswathy said...

Mango pickles are my favorite and these would be a great with curd rice

Sangeetha Subhash said...

Looks yummy...reminds me of home.

Malar said...

this is my favorite...mouthwatering :P

Tina said...

Mouthwatering and yummy...pickle looks very spicy......

Mrs.Menagasathia said...

வாவ் எனக்கு பிடித்த ஊறுகாய்,சூப்பரா இருக்கு.தயிர் சாதத்திற்க்கு சொல்லவே வேணாம்...

பிரியமுடன்...வசந்த் said...

மாங்காயே டேஸ்டி இதில் ஸ்பசி வேறா நாக்கில் எச்சில் ஊறுகிறது...

Priya said...

Mango oorukai paathathum pasikuthu Ammu...

பித்தனின் வாக்கு said...

/ * பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் கடுகு சேர்த்து பொரிந்ததும் ஊறுகாய் பொடி சேர்த்து வறுத்து மாங்காய் சேர்த்து ஒரு நொடி கிளறி இறக்கவும். //

இதில் சூடான எண்ணெயில் கடுகு பொறித்து ஊறுகாய் பொடி சேர்க்க சொல்லுகிறீர்கள். நெடி அடிக்காதா? காந்தலில் இருமல் வரும் அல்லவா? அதற்கு பதிலாக மாங்காயில் பொடி சேர்த்து தாளித்த எண்ணெயை மாங்காயில் கொட்டி கிளரினால் நன்றாக இருக்கும். மாங்காய்யும் கடிக்க சுவையாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று நாளைக்கு வைத்து சாப்பிடலாம்.

சூடான எண்ணெய்யில் மாங்காய் போட்டு அடுப்பில் ஒரு கிளறு கிளறினால் மாங்காய் கொஞ்சம் பசைவாக வெதும்பினாது போல் ஆகிவிடும். மாறுனாள் மட்டும் பயன்படுத்த முடியும் அல்லவா?
நான் சொல்வது சரியா. நல்ல பதிவு நன்றி. நான் வித்தியாசமாக புளியங்காய் சட்டினி பதிவு இட்டுள்ளேன் படிக்கவும்.

Valarmathi said...

Wow Ammu.....Mouthwatering, looks spicy and yummy.

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி நவாஸுதீன் ...

Ammu Madhu said...

நன்றி சித்ரா.

Ammu Madhu said...

நீங்கள் சொல்வது சரிதான் சரஸ்வதி..எனக்கும் தயிர் சாத்துடன் மிகவும் பிடிக்கும்.

Ammu Madhu said...

நன்றி சங்கீதா.

Ammu Madhu said...

நன்றி மலர்..

Ammu Madhu said...

நன்றி டினா

Ammu Madhu said...

நன்றி மேனகா..

Ammu Madhu said...

நன்றி வசந்த்..

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..

Ammu Madhu said...

நெடி லேசாக அடிக்கும்..ஆனாலும் எண்ணையில் போட்டு பின்பு மாங்காயில் போட்டால் தான் ருசி நன்றாக இருக்கும் இந்த ஊறுகாய்க்கு..இல்லையஎன்றால் பச்சை வாசனையுடன் தான் இருக்கும்..நான் மாங்காய் சேர்த்து ரொம்ப நேரம் கிளர சொல்ல வில்லையே..மாங்காய் சேர்த்து உடனே அடுப்பை அணைக்க சொல்லிட்டேன்..இந்த ஊறுகாய் இந்த முறையில் தான் செய்வார்கள்..நீங்கள் சொல்வது கட் மாங்கோ பிகிள்..அது வேறு முறை..இது வேறு முறை..கருத்திற்கு நன்றி பித்தன்.

Ammu Madhu said...

நன்றி வளர்மதி..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?