Tuesday, October 27, 2009

கோவில் கதம்ப சாதம்






தேவையான பொருட்கள்:
=========================
அரிசி - இரண்டு கப்
பெரிதாக நருக்கிய காய்கறிகள் - ஒன்றரை  கப் (வெள்ளை பூசணி துண்டுகள்,வெண்டைக்காய்,வாழைக்காய்,கத்தரிக்காய்,அவரைக்காய்,கேரி,உருளை,டபிள் பீன்ஸ்,உருளை,பட்டாணி)
துவரம் பருப்பு - ஒண்ணேகால் கப்
தேங்காய் - அரை மூடி 
மிளகாய் வற்றல் - மூன்று
பச்சை மிளகாய் துண்டுகள் - கால் டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
தக்காளி - இரண்டு 
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கடுகு - ஒரு டீஸ்பூன் 

எண்ணையில் வறுக்க:
----------------------------------
தனியா - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - அரை கைப்பிடி
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
தேங்காய் துருவல் - அரை மூடி
 பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்

வடை செய்வதற்கு:
==================
உளுந்து - ஒரு கப்
மிளகாய் - இரண்டு

உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரிசி மாவு - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை நறுக்கியது -ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
============

* முதலில் பருப்பை நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும்.

* வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு குழிகரண்டி நல்லெண்ணையில் சிவக்க வறுத்து தேங்காய்,இரண்டு தக்காளி சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

* அரிசியை நன்றாக களைந்து நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும்.

* குழம்பு செய்ய வேண்டிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல் சேர்த்து பொரிய விடவும்.

* பின்பு கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் பெருங்காயம்,மஞ்சள் தூள் ,பச்சை மிளகாய் ,மிளகாய் வற்றல் சேர்த்து அரை நொடி வதக்கி காய்கறிகளை சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.

* காய்கறிகள் நன்று வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க இடவும்.

* கொதித்ததும் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

* கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவவும்.

* சாதத்தை எடுத்து நன்கு மசித்து அதில் இந்த குழம்பை சேர்த்து நன்கு கிளறி உப்பு சரி பார்க்கவும்.

* குழம்பு சேர்த்து கலந்தபின் கலவை  குழ குழ வென்று இருக்க வேண்டும்..கெட்டியாக இருக்க கூடாது.

* எல்லாம் ஒன்று சேர்ந்ததும் வடையை சேர்த்து கிளறவும்.(வடையின் செய்முறை கீழே பார்க்கவும்).

* சுவையான கதம்ப சாதம் தயார்.இந்த முறையில் தான் கோவில்களில்  செய்கிறார்கள்.
எனக்கு மிகவும் பிடிக்கும்.நீங்களும் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

வடை செய்வதற்கு:
==================

* உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து லேசாக நீர் தெளித்து கெட்டியாக  அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த மாவை ஒரு மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

* பின்பு எடுத்து அதில் இஞ்சி ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய்  சேர்த்து கலக்கவும்.


* அரிசி மாவை சேர்த்து கலக்கவும்.

* ஒரு கடாயில் வடை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* இது கதம்ப சாதத்திற்கு போடும் வடையின் முறை.இதை போண்டாக்களின் வடிவத்தில் தான் செய்வார்கள்.

குறிப்பு:
=======

சாதத்தின் பதம் நன்றாக இருந்தால்தான் கதம்பம் சுவையாக இருக்கும்.சாதத்தின் பதம் சரி பார்க்க ஓர் கரண்டி சாதம் எடுத்து ஒரு தட்டில் வைத்து கைய்யால் அழுத்தி பார்த்தால் உருளை மசியல் போல் ஆகிவிடும்  .அதுவே சரியான பதம்.காய்கள் நறுக்கும் பொழுது பெரிதாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் அழியாமல்(குழையாமல்) இருக்கும்.
கடைசியில் தேங்காய் எண்ணெயில் மிதுக்க வற்றல் மற்றும் சுண்டைக்காய் வற்றல் பொரித்து சேர்க்கலாம்..

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க.

42 comments:

S.A. நவாஸுதீன் said...

கோவில் கதம்ப சாதம் போட்ட அன்னைக்குன்னு 108 தேங்காய், சாரி 108 ஃபாலோயர்ஸ் ஆயிட்டாங்க. சரியாத்தான் இருக்கு

Ammu Madhu said...

அட ஆமா..இப்போ தான் கவனிக்கிறேன்:)



அன்புடன்,

அம்மு.

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ்வ் சூப்பராக இருக்கு!!

Aruna Manikandan said...

Hi Ammu,

kadamba sadam supera irruku!!!!!!!!

Priya said...

Kadamba sadham pakkave pasiya thondurathu..Arumaiyana kuripu Ammu..

Geetha Achal said...

சூப்பராக இருக்கின்றது அம்மு..

கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டியது தான்..

அருசுவையில் உங்கள் வாரம்......வாழ்த்துகள்.

Chitra said...

super ammu.sounds like bisibelabhath.. will try once .Thanks :)

priya said...

looks delicious.......kalakiringa ammu!

sarusriraj said...

அம்மு கதம்ப சாதம் சூப்பரா இருக்கு செய்திட வேண்டியது தான்

Balakrishna Saraswathy said...

Very yummy looking kadamba sadam supera irruku....

Sangeetha Subhash said...

Kadam supera irruku!!!!!!!!ammu.:)

Saraswathi Iyer said...

Romba nalla yirukku ammu. looks very tasty...

my kitchen said...

Nalla erruku ammu

Jaleela said...

அம்மு ரொம்ப சூப்பர் உங்கள் கதம்ப சாதம், வடையும் அதிலேயே போட்டு கிளறிடுவாங்களா?

Valarmathi said...

Super irukku kadamba sadham, looks yummy.

Mythreyi Dilip said...

Super recipe Ammu, will try it!

A 2 Z Vegetarian Cuisine said...

First time here. Ungal Kadhambha sadham romba super a irrukku.

பித்தனின் வாக்கு said...

ஆகா இந்த கதம்ப சாம்பார், கதம்ப சாதம் எங்கள் மன்னி அருமையாக செய்வார்கள். டிசம்பரில் நான் அவர்களிடம் கேட்டு பதிவு இடலாம் என்று இருந்தேன். அதுக்குள்ள நீங்க போட்டுட்டிங்க. அதனால பரவாயில்லை. பருப்பு வடை போடுவது எனக்கு புதியது. எங்க மன்னி இந்த கதம்ப சாம்பார பண்ணி அதில் சுண்டைக்காய் பொறித்து போடுவார்கள். பின் கொஞ்சம் நெய் சேர்த்து குழைந்த சாதத்துடன் கலந்து சாதம் செய்வார்கள். மதியம் சாம்பார் மாதிரி சாப்பிட்டு விட்டு மீதம் உள்ளதை சாதம் மாதிரி பண்ணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் காய் நறுக்கும் பணி அடியேனுடையது. காய்கள் நறுக்கும் விதம் பத்தி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அது முக்கியமானது இல்லை என்றால் காய்கள் குழைந்து அழிந்துவிடும். எல்லா காய்களையும் ஒன்றுக்கு இரண்டு அல்லது நாலு பங்கு அளவு போடவேண்டும். நீளமான காய்கள் ஒரு அங்குலம் இருக்கவேண்டும். நன்றி.(இது எனக்கு மன்னி காய் நறுக்க கொடுத்த கண்டிசன்) மிக்க நன்றி.

Suvaiyaana Suvai said...

looks delicious!!!!

சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

ஸாதிகா said...

அழகாக சமைத்து,அழகாக அலங்கரித்து,அழகாக படம் எடுத்து பதிவுபோட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

Ammu Madhu said...

நன்றி மேனகா

Ammu Madhu said...

நன்றி அருணா.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..கண்டிப்பா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா ..கண்டிப்பா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

நன்றி சித்ரா..இதற்கு மசாலா சேர்க்க மாட்டார்கள்..பிஸி பேளே பாதத்திற்கு மசாலா சேர்ப்பாங்க..இது ரொம்ப நல்லா இருக்கும் கண்டிப்பா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..

Ammu Madhu said...

நன்றி சாரு..கண்டிப்பா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி

Ammu Madhu said...

நன்றி சங்கீதா

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி

Ammu Madhu said...

நன்றி செல்வி

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா..ஆமாம் வடையும் இதில் போடுவாங்க..

Ammu Madhu said...

நன்றி வளர்மதி

Ammu Madhu said...

நன்றி மைத்ரேயி

Ammu Madhu said...

நன்றி ஏ..

Ammu Madhu said...

பித்தன் நான் இந்த குறிப்பை என் பாட்டி,என் அம்மா இருவரிடமிருந்து கற்றுக்கொண்டது..இந்த முறையில் தான் எங்கள் ஊரில் உள்ள கோவிலில் பெருமாளுக்கு அமிசி பண்ணுவாங்க..எனக்கு ரொம்ப பிடிக்கும்..இதில் போடுவது பருப்பு வடை இல்லை..உளுந்து வடைதான்.. ஏங்க வீட்டிலும் மிதுக்க வத்தல்,சுண்டைக்காய் வத்தல் கடைசியில் வதக்கி சேர்ப்பாங்க..நான் தான் ரெசிப்பியில் போட மறந்துட்டேன்..காய் நறுக்குவது பற்றி மாற்றிவிட்டேன்..நன்றி..

Ammu Madhu said...

நன்றி சுவை

Ammu Madhu said...

நன்றி சங்கர்

Ammu Madhu said...

நன்றி சாதிகா .....

JOE2005 said...

நான் இப்பொழுதுதான் இந்த பதிவை பார்கிறேன்.நன்றி .கேரி என்றால் என்ன ?.double பீன்ஸ்க்கு தமிழில் என்ன ?மீண்டும் nanri

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?