Tuesday, October 6, 2009

ஸ்பைசி பொடி லெமன் ரைஸ்



தேவையான பொருட்கள்:
========================
ஒரு ஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு:
--------------------------------------------------------------------------
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - முக்கால் டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பூண்டு பொடி - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

தாளிப்பதற்கு:
****************

கடுகு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலக்கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நருக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு.
முந்திரி - இரண்டு டீஸ்பூன் 

லெமன் ரைஸ்சிற்கு :
_______________________

வடித்த சாதம் - ஒன்றரை கப்
லெமன் சாறு - இரண்டு டேபிள்ஸ்பூன்(புளிப்பு எவ்வளவு தேவையோ அவ்வளவு சேர்த்துக்கொள்ளுங்கள்)
உப்பு - தேவையான அளவு

நருக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

செய்முறை:
 ============

 

* முதலில் வருக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.

* வடித்த சாதத்தில் லெமன் சாறு,உப்பு,கொத்தமல்லி தலை சேர்த்து கிளறி கொள்ளவும்.

* தாளிக்க கொடுத்துள்ள வற்றை தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.

* பொடித்து வைத்துள்ள பொடியை காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்து நன்றாக எல்லாம் ஒன்று சேரும் படி கலக்கவும்.

* உப்பு சரி பார்த்து சாப்பிடவும்.

* சுவையான ஸ்பைசி லெமன் ரைஸ் தயார்.

 

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

9 comments:

Jaleela said...

உங்கள் லெமென் ரைஸும் சூப்பர், உங்கள் மின்னும் டெக்கரேஷனும் சூப்பர்.

Jaleela said...

நானும் இது போல் பொடி பொடித்து போடுவேன் ஆனால் (ஒன்லி கடலை பருப்பு,த்னியா, மிளகாய்)

S.A. நவாஸுதீன் said...

சும்மா தக தக தகன்னு மின்னுதே

Malar said...

hmmm..glitering lemon rice..

Priya said...

Lemon rice superb, athuvum special podila senchathu ache..kalakals!!

Geetha Achal said...

போன வாரம் தான், அம்மா இந்த பொடி கலந்த லெமன் ரைஸினை எங்களுக்கு செய்து கொடுத்தாங்க....மிகவும் சூப்பராக இருந்தது...

அம்மா செய்த லெமன் ரைஸில் பூண்டு சேர்க்கவில்லை...அது தான் வித்தியாசம்...நீங்க சேர்த்து இருக்கின்றிங்க...


ஆனாலும் திரும்பவும் நியாபம் செய்துவிட்டிங்க...அம்மாகிட்ட சொல்லி செய்வேண்டியது தான்..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க அருமை. கொஞ்சம் உருளை காரக்கறி அல்லது சிப்ஸ் அல்லது இலைவடாம்(அரிசி அப்பளம்) இருந்தா போதும். வெட்டு வெட்டலாம். ரொம்ப நன்றி. படங்கள் அருமை.

Padma said...

Looks too good and lovely presentation

நட்புடன் ஜமால் said...

லெமன் ரைஸே சூப்பர் தான்

இதுல ஸ்பைசியாவா - அருமைங்கோ

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?