Friday, December 11, 2009

பரோட்டா

தேவையான பொருட்கள்:
=======================
மைதா - மூன்று கப்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பால் - கால் கப்
மாவு பிசைய எண்ணெய்  - மூன்று டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பரோட்டா செய்வதற்கு
தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு

செய்முறை:
===========

* மைதா ,சர்க்கரை ,உப்பு,மூன்றையும் ஒன்றாக கலந்து பால செய்து பிசிந்து ஒரு நிமிடம் அப்படியே விட்டு தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய்யை மாவு ஊன்டையின் மேல் எல்லா பாகங்களிலும் படும்மாறு தடவி மூன்று மணி நேரம்  ஊற வைக்கவும்.

* பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாதிபோல் தேய்த்து சிறிது எண்ணெய் தடவவும்

* மேலும் நன்றாக தேய்த்து பெரிய வட்டமாக செய்து புடவைக்கு கொசுவம் வைப்பதுபோல் செய்து ஒரு பக்கத்திலிருந்து உருட்டி கொள்ளவும்.

மேலே கொடுத்துள்ள படம் போல் உருட்டிக்கொள்ளவும்.

* பின்பு (dry flour)மாவில் உருட்டி சப்பாத்தி போல் தேத்து சூடான தோசை கல்லில் போட்டு இரு போமும் சிவந்ததும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி எடுக்கவும்.

* சுவையான பரோட்டா தயார்.

பரோட்டா செய்து முடித்ததும் மேலே வெண்ணெய் தடவவும்.(அடுப்பில் இருந்து எடுத்தபிறகு)இப்படி செய்வதினால் கடினம் ஆகாது.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க.

58 comments:

Divya Vikram said...

PArotta supera irukku!

Lavanya Siva said...

Hmmmmmmm, parotta with salna or chicken pepper curry.....takes me to that olden day. Thanks for sharing

சரவணகுமரன் said...

ஹைய்யா... நம்ம ஐட்டம்... :-)

சரவணகுமரன் said...

இது சம்பந்தமான ஒரு பதிவு...

http://www.saravanakumaran.com/2009/10/blog-post_27.html

தியாவின் பேனா said...

நல்ல சமையல் குறிப்பு

Devasena Hariharan said...

Hey since how long r u having this blog, coool.

My sis used to say that adding, yeast to parotta will make it soft, along with sugar,milk and keep it aside for 1 hr.

Your parotta, looks super duper. It will go well with chicken gravy or kurma. hmmmmmm

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு அம்மு.

நான் இரண்டு முறை செய்து பார்த்தேன், எல்லாம் சரியாக வருகிறது ஆனால், சிறிது நேரத்தில் மெதுவாக இல்லாமல் சற்று கடினமாகி விடுகிறது.

priya said...

parotta is so perfect...just like restaurant style!..super'ah irruku ammu...perfect with chicken curry!

sarusriraj said...

அம்மு உங்கள் புரோட்டா சூப்பர்.

SUFFIX said...

ம்ம்ம் படங்களுடன், எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

படமே பசியக் கெளப்புதுதுங்க அம்மு.

D.R.Ashok said...

இப்பதாங்க எனக்கு தெரிஞ்ச டிஷ்ஷ போட்டுயிருக்கீங்க. அப்புறம் நீங்கன்னு நினைச்சுட்டு வேற ஒருத்தங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டேன்(கொஞ்ச நாளைக்கு முன்னால. ”அதுக்கென்ன இப்போன்னு” கேக்கறீங்களா. இப்ப தான் கண்டுபிடிச்சேன். நீங்க வேற அவங்க வேறேன்னு :)
(”வாழ்த்துதானே சொன்னீங்க நல்ல விஷயம்தான்னு” நீங்க சொல்லறது கேக்கற்து)

Nandini said...

Wow, Ammu! Great Parotta! My hubby's fav.

Mrs.Menagasathia said...

பரோட்டா சூப்பர்!!

Mythreyi Dilip said...

Nalla Irukkingala Ammu?
My new home is very nice, nalla neighborhood.


Super parotta Ammu, naaku uruthu. I learnt to make parotta from my aunt and she used make like you. I like to have with Chalna:)

shanthi said...

Perfect and great dish

Balakrishna Saraswathy said...

Superaa irukku and ?I'm going to prepare them tom for dinner and let u...

கோபிநாத் said...

Parotta super

Padhu said...

Parota looks yummy! thanks for the recipe.
http://padhuskitchen.blogspot.com/

Aruna Manikandan said...

Parota my all time favorite.
romba nalla irruku

Malar Gandhi said...

Parotta is very inviting...

Idhu rombha supera irruku, seri unga veetukku eppa varalaam-nu solunga, he he (just kidding)

Lovly presentation. they are perfect:)

I will be very happy..if you plan to visit my food blog, dear. And many thanks for visiting my 'kavidahi blog'.

Padma said...

Parotaa looks super... perfect with kurma

Valarmathi said...

Parotta looks super and yummy.

kothiyavunu said...

Perfect and yummy parotta!!!

Viki's Kitchen said...

Very nice parotta. Photo makes me drool.

Sarah Naveen said...

Oh wow!!! super yummy and perfect dea..!!!

பாத்திமா ஜொஹ்ரா said...

அம்மு உங்கள் புரோட்டா சூப்பர்.

ஹுஸைனம்மா said...

அம்மு, முட்டை அல்லது சோடா உப்பு சேர்க்காமல் பரோட்டா செய்தால் ஸாஃப்டா வருமா?

நான் முட்டை சேர்ப்பேன். ஆனாலும் சிலசமயம் கடினமாகிவிடும்.

Ammu Madhu said...

நன்றி திவ்யா

Ammu Madhu said...

நன்றி லாவண்யா

Ammu Madhu said...

வருகைக்கு நன்றி சரவணன்..

Ammu Madhu said...

நன்றி தியா

Ammu Madhu said...

நன்றி தேவேனா ஹரிஹரன் ..நான் பரோட்டாவிற்கு ஈஸ்ட் சேர்ப்பதில்லை ..லேயர் செயும் பொழுது கிழிகிறது..:-)

Ammu Madhu said...

சிங்கக்குட்டி நீங்கள் பரோட்டா செய்து முடித்ததும் சிறிது பட்டர் தடவுங்கள் இரு புறமும்.மென்மையாகவே இருக்கும்..சிறிது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்..

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..

Ammu Madhu said...

நன்றி சாரு

Ammu Madhu said...

நன்றி சுப்பிக்ஸ்

Ammu Madhu said...

செய்து பாருங்க நவாஸ்..ரொம்ப நல்லா இருக்கும்..

Ammu Madhu said...

என்ன அஷோக் இப்படி குழப்பிடீங்க.யாருக்கு வாழ்த்து சொன்னீங்க?என்னக்கு எதற்க்காக வாழ்த்து சொல்ல நினைத்தீர்கள்?

Ammu Madhu said...

நன்றி நந்தினி

Ammu Madhu said...

நன்றி மேனகா..

Ammu Madhu said...

ரொம்ப நல்லா இருக்கேன் மைத்ரேயி..புது வீடு பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.நான் இதை எங்கள் ஊரில் உள்ள ஒரு பரோட்டா கடையில் கற்று கொண்டேன்.

Ammu Madhu said...

நன்றி கோபி

Ammu Madhu said...

நன்றி ஷாந்தி

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி

Ammu Madhu said...

நன்றி பத்து..

Ammu Madhu said...

எப்போ வேணும்னாலும் வாங்க மலர் சாப்ட..Always welcome..கண்டிப்பாக உங்கள் குக்கரி ப்ளாகிற்கு தொடர்ந்து வரேன்.நன்றி மலர் .

அண்ணாமலையான் said...

பரோட்டா பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு. என்னைக்காவது செஞ்சு சாப்டுட்டு டேஸ்ட் எப்படின்னு சொல்றேன்.

Ammu Madhu said...

நன்றி பத்மா

Ammu Madhu said...

நன்றி வளர்மதி

Ammu Madhu said...

நன்றி கொதியவுனு

Ammu Madhu said...

நன்றி விக்கி

Ammu Madhu said...

நன்றி பாத்திமா

Ammu Madhu said...

நன்றி ஹுசைன் அம்மா.நான் முட்டை செப்பதில்லை.(சுத்த சைவம்).சாப்ட்டாக வரும்.செய்து முடித்ததும் கடைசியில் பட்டர் தடவி உபயோகித்தால் ஹார்ட் ஆகாது.

Ammu Madhu said...

நன்றி சாரா..

Balakrishna Saraswathy said...

I have tried the recipe and was really good as well as soft just like the restaurant..Thanks and I have blog it too.

my kitchen said...

Ennakum konjam annupi vaigalen,My favorite one,came out perfectly

Dr.Sangeetha said...

Very nice narration. It would be useful if you could write another post on how to make barotta chaalna (sambar for barotta). I will be delighted if could write the same. I read all your posts.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?