Wednesday, January 27, 2010

ஆலு பராத்தாதேவையான பொருட்கள்;
=======================
உள்ளே நிரப்புவதற்கு:
--------------------------------
உருளை கிழங்கு - மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
மிளகாய் தூள் -  ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பொடியாக நருக்கிய
 கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி - கால் கப் (தேவைப்பட்டால்)

மேல் மாவிற்கு :
-----------------------

மைதா - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
நீர் - மாவு பிசைவதற்கு
எண்ணெய் - பராத்தா செய்வதற்கு

செய்முறை:
============

* மாவு உருண்டையினுள் நிரப்புவதற்கு தேவையான உருளை கலவையை முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
* உருளை கிழங்கை தோல் சீவி நன்றாக வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.
*  பட்டாணி தவிர மீதி அனைத்து பொருட்களையும் மசித்த உருளையுடன் சேர்த்து நன்றாக மசிக்கவும்..(வெந்த உருளை கிழங்கு மிக சூடாக இருக்கும் .கவனமாக கரண்டியால் கிளறவும்)
* பட்டாணியை ஒரு நிமிடம் உப்பு நீரில் வேக வைத்து நீரை வடித்து இந்த கலவையில் சேர்த்து கிளறவும்.
* உள்ளே நிரப்புவதற்கு கலவை தயார்.

மேல் மாவு செய்முறை:
-----------------------------------

* மைதா,உப்பு,சர்க்கரை,சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசையவும்.

பாராத்தா செய்முறை:
***********************

# மேலே உள்ள படம் பதத்திற்கு மாவு வந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருட்டி சப்பாத்தி போல் தேக்கவும்.

# ஒரு எலுமிச்சை அளவு உருளை கலவையை எடுத்து தேய்த்த மாவினுள்  வைத்து மாவினால் மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.

# தேவையானால் கீழே ஒட்டாமல் இருக்க சிறிது மைதா மாவினை தூவி தூவி தேய்க்கவும்..

* தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த பராத்தாவை போட்டு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு மறுபுறம் சிவந்ததும் அதிலும் சிறிது எண்ணெய் விட்டு சமமாக பரப்பி எடுக்கவும்.

* சிறிது காய்வது போல் இருந்தாள் கொஞ்சம் வெண்ணை யை பராத்தா எடுத்தவுடன்  மேலே தடவும்.


* செய்து முடித்தவுடன் சாப்பிட தாமதமாகுமானால்  காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
=======
பச்சை பட்டாணி மட்டுமே சேர்க்கலாம்.காய்ந்த பட்டாணியை வேக வைத்து சேர்த்தால் நல்லா இருக்காது.பச்சை பட்டாணியை வதக்கி உருளை கலவையில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.எப்படி செய்வதால் பராத்தா தேய்க்கும் பொழுது கடினமாக இருக்காது.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க..

45 comments:

Kodai Viswa said...

Hi Ammu, Thanks for stopping by my blog and commenting on my post.

அண்ணாமலையான் said...

"செய்து முடித்தவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்." அப்ப சாப்ட கூடாதா?

நட்புடன் ஜமால் said...

இதே மெத்தட்டில் காரெட் அல்லது முள்ளங்கி போட்டுக்கிடலாம் தானே ...

உருளை அவ்வளவாக பிடிப்பதில்லை.

பித்தனின் வாக்கு said...

ஆகா பராத்தா நல்லா இருக்குங்க. உருளைக்கிழங்கும் பராட்டேவும் சூப்பர் காம்பினேசன். குருமா படம் போடவில்லையா. நன்றி.

Padma said...

Looks too good. Perfect with some spicy gravy.

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமையான் ரெசிப்பி,இதுவரை ரெடி மேட் பராத்தா சாப்பிட்டிருக்கேன்.நன்றி அம்மு

shanthi said...

Paratha is perfect and my favourite

jeyashrisuresh said...

all time fav.looks nice

ஸாதிகா said...

மாவில் சீரகம்,பூரணத்தில் சாட் மசாலா..சுவை கட்டாயமாக வித்தியாசமாகத்தான் இருக்கும்.ஒரே மாதிரி பிளைன் சப்பாத்தி செய்து போர் அடிக்கும் பொழுது இது வித்தியாசப்படும்.கலவையில் பட்டாணி சேர்ப்பதால் சப்பாத்தி தேய்க்க வருமா?

Jaleela said...

ரொம்ப அருமையான ஆலு பராட்டா , என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

sarusriraj said...

ஈசியான ஹெல்த்தி ரெசிபி

S.A. நவாஸுதீன் said...

ஆகா!!!

ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தேன் இதைத்தான். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மு. இந்த பாம்பே பசங்க கூட சேர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு இதுக்கு அடிக்ட் ஆயிட்டேன் நான். ஊருக்கு போயி கண்டிப்பாக நானே செய்வேன்.

Ms.Chitchat said...

Super alu paratha. Pics are very good and I loved the step by step explanation with pics. Tempting too :):)

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

Balakrishna Saraswathy said...

Simply delicious!!!

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்...

Malar Gandhi said...

Wow, Ammu...alu paratha looks perfect da:) Love it, its very fulfilling meal:)

பேனாமுனை said...

wow,very nice.

Valarmathi said...

Super!!!! looks tempting and yummy.

D.R.Ashok said...

thanz Ammu :)

Chitra said...

Super aa irukku ammu :)

Divya Vikram said...

ALoo paratha super a irukku. I make it with kodhumai maavu to make it more healthy!

சிங்கக்குட்டி said...

வாவ் சூப்பர் சாப்பாடு...

டெல்லியிலிருந்து பஞ்சாப் போகும் வழியில், பஞ்சாப் ரோடுகளில் இருக்கும் தாபாவில் ஒரு கப் தயிருடன் சாப்பிட்டால் அன்று இரவு திரும்ப அதே இடம் வரும் வரை எனக்கு பசிக்காது!.

அது ஒரு அழகிய நிலாக்காலம் :-)

R.Gopi said...

அம்மு

பராத்தா இங்கே... குருமா எங்கே??

அந்த ரெசிப்பியும் போடுங்கோ...

நான் நேத்திக்கு நைட்தான் ஆலு பராத்தா வெட்டினேன் / கட்டினேன்..

இங்க வந்து பார்த்தா, அதே அதே, சபாபதே...

அப்படியே இதுக்கும் பதில் சொல்லிடுங்கோ...

//அண்ணாமலையான் said...
"செய்து முடித்தவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்." அப்ப சாப்ட கூடாதா?//

Ammu Madhu said...

//செய்து முடித்தவுடன் சாப்பிட தாமதமாகுமானால் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.//

maathitten annaamalaiyaan.Thanks for stopping by.

Ammu Madhu said...

ungalukku viruppamaana kaaykarikal serthu seyyalaam jamaal

Ammu Madhu said...

Thanks Pithan.Ill post the kuruma recipe very soon.

Ammu Madhu said...

Thanks padma.

Ammu Madhu said...

Thanks fathima.

Ammu Madhu said...

Thanks shanthi.

Ammu Madhu said...

Thanks jeya.

Ammu Madhu said...

Thanks sathika.masika solirukkene pattaniya.adhunaala theika varum.

Ammu Madhu said...

Thanks jaleela

Ammu Madhu said...

Thanks saru

Ammu Madhu said...

Thanks navas.

Ammu Madhu said...

Thanks chitchat

Ammu Madhu said...

Thanks saraswathi

Ammu Madhu said...

Thanks menaka.

Ammu Madhu said...

Thanks malar.

Ammu Madhu said...

Thanks penamunai

Ammu Madhu said...

Thanks mathi

Ammu Madhu said...

Thanks ashok.

Ammu Madhu said...

Thanks chitra.

Ammu Madhu said...

Thanks divya.

Ammu Madhu said...

Thanks singakutti:)

Ammu Madhu said...

Thanks gopi.Kuruma recipe post paniten.Neenga keta kelvikkum pathil soliten.:)

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?