Wednesday, February 3, 2010

நவரத்ன குருமா


தேவையான பொருட்கள்:
=======================
முந்திரி - பத்து 
பாதாம் - ஐந்து 
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவது போல் பெரிதாக நறுக்க வேண்டும்.
பீன்ஸ் - கால் கப்
உருளை (அல்லது) வாழைக்காய்  - கால்கப் 
கேரட் - கால் கப்
முந்திரி,பாதாம்,பிஸ்தா,உலர் திராட்சை- எல்லாம் கலந்து கால் கப்
பிரெஷ் க்ரீம் - கால் கப் (இது கிடைக்கவில்லை என்றால் பால் உபயோகபடுத்தவும்.)
மாதுளம் விதைகள் - கால் கப்
பச்சை திராட்சை (அல்லது) அன்னாசி பழ துண்டுகள் - கால் கப்
(மேலே குறிப்பிட்டுள்ள பழங்கள் இல்லாமலும் செய்யலாம்.பழக்கலவைகளை பரிமாரும்முன் சேர்க்கவும்.இல்லாவிட்டால் கசப்பு தன்மை வந்துவிடும்)
பட்டை,கிராம்பு,ஏலம்,பிரிஞ்சி இலை - தலா ஒன்று 
எண்ணெய் - கால் கப்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - மூன்று
வெள்ளை மிளகு தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
===========

* வெங்காயத்தை பொடியாக அறிந்து கொள்ளவும்.

* மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.

* ஒரு கடாயில் மூன்று கப் நீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

* கொதிக்க ஆரமித்ததும் முந்திரி,பாதாம்  மற்றும் நருக்கிய வெங்காயம் சேர்த்து தணலை நடுமானமாக வைத்து நன்கு வேக விடவும்.

* வெங்காயம் மற்றும் முந்திரி வெந்ததும் தெள்ளத்தெளிவாக அதான் நிறம் மாறும் அதான் பின்பு எடுத்து நீரை வடித்து ஆறியதும் மின்னம்மியில் சேர்த்து கால் கப் நீர் விட்டு நன்றாக மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* காய்கறிகளை ஒன்றும் பாதியுமாக வேக  வைத்து நீரை வடித்து கொள்ளவும்.

* ஒரு கடாய்ல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்

* எண்ணெய் பிரியும் வரை வதக்கியதும் தனியா தூள் சேர்க்கவும்.

* ஒரு நிமிடம் வதக்கி இரண்டு கப் நீர் சேர்த்து தேவையான அளவு உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்

* கலவை கெட்டியானதும் வேக வைத்த காய்களை சேர்த்து மிளகு தூள் சேர்த்து ஒன்று சேர விடவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்ததும் க்ரீம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடவும்.

* முந்திரி,பாதாம்,உலர்திராட்ச்சை சேர்த்து கலந்து பரிமாறும் முன் பழ கலவைகள் கொஞ்சம் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

* சுவையான நவரத்ன குருமா தயார்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை சொல்லவும்.
35 comments:

ஸாதிகா said...

குருமாவில் ஆரஞ்சு சுளை மிதக்கிறது என்று பார்த்தேன்.வித்தியாசமான, ரிச்சான குருமாதான்.நீங்கள் டெகரேட் செய்து படம் எடுப்பது தனி அழகு மது.பாராட்டுக்கள்!

Nithya said...

Wow.. paakave arumaya irukku :)

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கு.

priya said...

super'ah irukku ammu....kalakuringa!

Padhu said...

Innovative recipe Ammu!

பித்தனின் வாக்கு said...

நான் நவரத்தின குருமாவை கடைகளில் சாப்பிட்டு இருக்கேன். அருமையான பதிவு. படம் மிக அருமை. நன்றி.

Rohini said...

romba vidhayasamana kurma...! kandipa suvai yum irukum! fruit pieces serthathu ila, inime try pannanum!

Kanchana Radhakrishnan said...

குருமா super

shanthi said...

Fantastic and awesome kurma . Love the oranges in it.

Nandini said...

Superb Kurma! Arumai! Arumai!!!

Mrs.Menagasathia said...

Super Kurma!

SriLekha said...

wow! that's look delicious!

join with us in the efm- mutton series going here(http://www.srishkitchen.com/2009/12/efm-mutton-series.html) and the deadline for the event is feb.15th

tasteofsaras said...

A different twist to the normal preparation..looks yummmyyy:)

Pavithra said...

Vaayila jollu oluguthu paarka paarka ...very nice.Hey, thanks for dropping by . That really encourages me.

Sarah Naveen said...

That looks so yummy!!

suvaiyaana suvai said...

வித்தியாசமான, ரிச்சான குருமாதான்!!!

Ammu Madhu said...

நன்றி சாதிகா.மிகவும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.தொடர்ந்து வாங்க.

Ammu Madhu said...

நன்றி நித்யா.

Ammu Madhu said...

நன்றி நவாஸ்

Ammu Madhu said...

Thanks priya

Ammu Madhu said...

Thanks padhu

Ammu Madhu said...

Thanks pithan.

Ammu Madhu said...

Thanks rohini.

Ammu Madhu said...

Thanks kanchana

Ammu Madhu said...

Thanks shanthi

Ammu Madhu said...

Thanks nandhini

Ammu Madhu said...

Thanks menakaa

Ammu Madhu said...

ஸ்ரீலேகா உங்களின் அழைப்பிற்கு நன்றி.நான் சுத்த சைவம்.அதனால் உங்களுடைய ஈவன்ட்டில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.கண்டிப்பாக அதுத்து ஏதாவது வெஜ் ஈவன்ட் தொகுத்தீர்களானால் கலந்து கொள்கிறேன்.தொடர்ந்து வாங்க.

Ammu Madhu said...

Thanks sara.

Ammu Madhu said...

Thanks pavi.

Ammu Madhu said...

Thanks suvai.

Valarmathi said...

Different and yummy one, looks delicious.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு அம்மு

Devasena Hariharan said...

different idea Ammu!

நட்புடன் ஜமால் said...

ரொம்ப ஆவலை தூண்டுது

நவரத்னம்

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?