Thursday, March 4, 2010

தம் ஆலூ


தேவையான பொருட்கள்;
========================
சின்ன உருளை கிழங்கு - அரை கிலோ
முழு தனியா - இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
மிளகாய் வத்தல் - ஐந்து
இஞ்சி துருவியது - ஒரு டீஸ்பூன்
பூண்டு பல் - பத்து
எண்ணெய் - கால் கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் -இரண்டு டீஸ்பூன்
உப்பு
ஏலம் - ஒன்று
பட்டை - இரண்டு
கிராம்பு - இரண்டு
பிரியாணி இலை - ஒன்று 
சர்க்கரை - ஒரு சிட்டிகை

செய்முறை:
============

* உருளை கிழங்கை எண்பது சதவிகிதம் வேக வைத்து போர்க்(fork) வைத்து ஓட்டைகள் போட்டு கொள்ளவும்.

* இஞ்சி,பூண்டு,மிளகு,தனியா,மிளகாய் வற்றல்,ஒரு பட்டை,ஒரு கிராம்பு எல்லாவற்றையும் பச்சையாக மைய அரைத்து கொள்ளவும்.(வறுக்க கூடாது)

* உருளை கிழங்கில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து உருளை கிழங்கு உடையாமல்  பிரட்டி ஐந்து நிமிடங்கள் விடவும்.

* அரைத்த விழுதை உருளை கிழங்கில் சேர்த்து பிரட்டி விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி பட்டை,கிராம்பு ,ஏலம்  சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளிச்சு இலை சேர்த்து உருளைகிழங்கை சேர்க்கவும்.

* மிதமான தணலில் வைத்து மசாலாக்களை வேக விடவும்( பச்சை வாசனை போகும் வரை ).

* உருளை கிழங்கு லேசாக வறுபட ஆரமித்ததும் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.(நீர் மிகவும் கம்மியான அளவே விட வேண்டும்)

* பொடித்த மசாலா பொடி,கொத்தமல்லி தூவி மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதித்ததும் பரிமாறவும்.

சுவையான தம் ஆலூ தயார்.
சப்பாத்தி ,ரொட்டி வகைகளுக்கு பக்க உணவாகவும் சாதத்திற்கு பிசிந்து சாப்பிடவும் மிகவும் நன்றாக இருக்கும்.
இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லவும்.

17 comments:

Padma said...

Looks mouthwatering... spicy and lovely color.

இமா said...

Nice recipe Ammu.

நட்புடன் ஜமால் said...

ஆலூ பதிலா வேற எதுனா போட்டு செய்ய முடியுமா இதே போல்

என்னமோ ஆலூ பிடிப்பதில்லை.

sarusriraj said...

mouth watering recepie very nice one ammu

Padhu said...

Dum aloo look perfect! SO inviting
http://padhuskitchen.blogspot.com/

ஸாதிகா said...

பேபி உருளையில் சூப்பரான தம் ஆலூ.பார்க்கவே அழகா இருக்கு.

PriyaRaj said...

Romba vithyaasama eruku ammu...will try it soon

Ms.Chitchat said...

Super recipe. Click looks great and reflects the essence of the dish. Loved the recipe too.

Chitchat

SUFFIX said...

Yummy recipe..Thx.

நட்புடன் ஜமால் said...

டைமெண்ட் செஃப் வாழ்த்துகள்

Chitra said...

Looks mouthwatering...will surely try this method :)

shanthi said...

Tangy and spicy. Congrats on being a diamond chef

Balakrishna Saraswathy said...

Very delicious and tempting :)

Devasena Hariharan said...

Good one Ammu.. the pic has come out well...

Pavithra said...

Looks mouthwatering.. and wonderful color.really great combo with naan looks fantastic.

Pavithra
www.dishesfrommykitchen.com

Kanchana Radhakrishnan said...

Yummy....

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?