Friday, March 26, 2010

திடீர் ரசம்


தேவையான பொருட்கள்:
========================

தக்காளி - மூன்று
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரக தூள் -  அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு பல் - ஐந்து
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - மூன்று
உப்பு - தேவையான அளவு
புளி  பேஸ்ட் - கால் டீஸ்பூன் (அல்லது) புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
கடுகு- ஒரு டீஸ்பூன்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கப்

செய்முறை:
===========

* முதலில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து அரைத்து கொள்ளவும்.

* மூன்று பூண்டு பற்களை மிகவும் போதிய நறுக்கி கொள்ளவும் அல்லது துருவிக்கொள்ளலாம்.

* ஒரு பாத்திரத்தில் மூன்று கப் நீர் ஊற்றி பொடியாக நருக்கிய தக்காளி,மிக பொடியாக நறுக்கிய வெங்காயம்,கீறிய பச்சை மிளகாய்,அரைத்த பருப்பு,நறுக்கிய பூண்டு பல்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியா தூள்,சீரக தூள்,கரைத்த புளி,சர்க்கரை,உப்பு,இஞ்சி துறுவல்,கொத்தமல்லி எல்லாம் சேர்த்து கலக்கி அடுப்பில் மிதமான தீயில் அரை மணி நேரம் வைக்கவும்.

* வேறு ஒரு தாளிக்கும் கடாயில் நெய் ஊற்றி மிதமான தீயில் காய விடவும்.

* மிளகு,சீரகம்,பூண்டு மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து உரலில் இடித்து கொள்ளவும்.(மிகவும் சிறிய உரல் பீங்கானில் கிடைக்கிறது மார்க்கெட்டுகளில்)
உரல் இல்லாதவர்கள் பிளென்டரில் நீர் சேர்க்காமல் ஒரு நிமிடம் சுற்ற விடலாம்.

* நெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் சீரகம் சேர்க்கவும்.

* சீரகம் வெடித்ததும் வெந்தயம்,காய்ந்த மிளகாய்,உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

* வெந்தயம் சேர்த்தவுடன் மீதி இரண்டையும் சேர்த்து விடவும் இல்லாவிட்டால் வெந்தயம் கருகி விடும்.

* உளுத்தம் பருப்பு சிவந்ததும் பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து இடித்தவற்றை சேர்த்து பூண்டு சிவந்ததும் ,சிறிது மஞ்சள் பொடி சேர்த்து  கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க வைத்து பரிமாறவும்.

* சுவையான ரசம் தயார்.இதற்கு ரசப்பொடி தேவையில்லாததால் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகித்து செய்து விடலாம்.சுவையாக இருக்கும்.

குறிப்பு:
========

இது வழக்கமான ரசம் செய்முறை அல்ல.கொஞ்சம் வித்யாசமாக அதே சமயம் மிகவும் சுவையாக இருக்கும்.

26 comments:

Ms.Chitchat said...

Arumai,arumaiyana rasam. Never heard of this recipe. I make it different dhideer rasam,will share with u all sometime later. Yours looks really superb.

Cool Lassi(e) said...

Rasam pramaadham. Love the flower decoration. I make flowers made of tomato peel but this looks way better than that!

Priya said...

Rasamoda vaasam inga varaikum varuthu...rasathuku naduvula irrukura roja supera irruku Ammu..

Padma said...

Simple and delicious rasam. Nice presentation Ammu :)

நட்புடன் ஜமால் said...

திடீர்ன்னு செய்து பார்த்துப்போம் ...

sarusriraj said...

very nice ammu your presentation with potato carving very nice .

SathyaSridhar said...

AHa,,rombha arumaiyana rasam ammu,,neenga sonna mathiri ithu thidir rasam thaan athuvum rombha nalla alangaram senjurukrenga pa,, kandippa itha naan senjupaarpen!! ammu.you got a nice blog dear with full of vibrant recipes, am following ur blog.thanks for sharing dear,,take care n keep on smiling.

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...ரசம் சூப்பர்ப்

Chitra said...

Super , kandippa try panren..:)

Divya Vikram said...

Different recipe. Will try it sometime.

Padhu said...

Very nice rasam Ammu .The potato flower looks lovely dear

Vijis Kitchen said...

simple and delicious rasam.

Jaleela said...

ரொம்ப அருமையா இருக்கு அபப்டியே ஊற்றி குடிக்கலாம் போல,
நடுவில் உள்ள அலங்கரிப்பு ம்ம்ம்ம்ம்

Ammu Madhu said...

Thankyou chitchat

Ammu Madhu said...

Thanks lassi

Ammu Madhu said...

Thanks priya

Ammu Madhu said...

Thanks padma.

Ammu Madhu said...

Thanks jamal.

Ammu Madhu said...

Thanks saru.

Ammu Madhu said...

Thank you sathya.

Ammu Madhu said...

Thanks geethaka.

Ammu Madhu said...

Thanks chitra

Ammu Madhu said...

thanks divya.

Ammu Madhu said...

thanks padhu

Ammu Madhu said...

Thanks viji.

Ammu Madhu said...

thanks jaleela akka

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?