Tuesday, March 30, 2010

கார சட்னி


தேவையான பொருட்கள்:
\=======================

தக்காளி - மூன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு பற்கள் - பதிமூன்று
மிளகாய் வற்றல் - ஒன்பது அல்லது பத்து (காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்துக்கொள்ளவும்)
கடலை பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
========
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
============

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் போட்டு வெடிக்க விடவும்.

* பின்பு கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

* வெங்காயத்தை சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை துண்டுகளாக்கி கொள்ளவும்.

* பருப்புகள் சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டுகளை சேர்க்கவும்.

*பூண்டு லேசாக சிவக்க ஆரமித்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

* தக்காளி மசிய ஆரமித்ததும் அடுப்பை  அணைத்து கலவையை ஆறவிடவும்.

* நன்கு ஆறியதும் மிக்சரில்  சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.



* "தாளிக்க" என்ற தலைப்பின் கீழ் உள்ள பொருட்களை தாளித்து சட்னீயில் சேர்த்து  கலக்கவும்.

* சுவையான காரசாரமான கார சட்னி தயார் .

* இட்லி,தோசை,வெரைட்டி ரைஸ்சிற்கு பக்க உணவாக வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

11 comments:

jeyashrisuresh said...

nice and spicy chutney.

karthik said...

தகவல்கள் மிகவும் அருமை

Krishnaveni said...

first time here... excellent blog esp. in tamil...lovely recipes...kaara chutney looks great...

Ms.Chitchat said...

Super kaara chutney, liked ur version, got to try next time.

Mrs.Menagasathia said...

நல்ல காரசாரமான சட்னி!!

Padma said...

Looks spicy and yummy... perfect with idli/dosa.

Uma said...

beautiful pics Ammu.. but couldn't understand anything.. i dont know Tamil.. A blog in Tamil and your blog stands out different in the blogging world.

Jaleela said...

அம்மு ரொம்ப நல்ல இருக்கு கார சாரமாக,

Geetha Achal said...

பார்க்கும் பொழுதே கண்டிப்பாக சூப்பராக இருக்கு...இத்துடன் நாங்கள் சிறிது புளி சேர்த்து செய்வோம்...நீங்கள் நிறைய காரம் சாப்பிடுவீங்க போல...கார சட்னியில் பச்சை மிளகாய் சேர்ப்பது சூப்பர்ப்...நல்ல வித்தியசமான சட்னி....

SathyaSridhar said...

ammu,,kaara chutney simply superb paa,, rombha nalla irukku paarkave kandipa suvaiyum nalla irukkum,, thagavalgal rombhavum ubayogama irukku,,, naan ithai naalaikku kaalaila idli kku thottuka kandipa senju paarkiren,,,

Anu said...

Spicy and yummy chutney... Please do collect your award from my blog...

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?