Saturday, April 17, 2010

முருங்கக்காய் கார குழம்பு (செட்டிநாடு)

தேவையான பொருட்கள்:
========================

புளி - எலுமிச்சை அளவு
முருங்கக்காய் துண்டுகள் - பத்து
சின்ன வெங்காயம் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
தக்காளி - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து (optional)
நல்லெண்ணெய் - இரண்டு குழிகரண்டி +அரை  குழிகரண்டி
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒன்று அல்லது இரண்டு  டீஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை

செய்முறை:
=============

* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும்,

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை மூன்று கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அரைக்க வேண்டியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தக்காளி ,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் மீதும் உள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* சுவையான கார குழம்பு தயார்.
குறிப்பு:
=======

உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லவும்.



32 comments:

Chitra said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... sssssssssssssuper!

பாத்திமா ஜொஹ்ரா said...

அம்மு ரொம்ப கார சாரமா செஞ்சிருக்கீங்க.ரொம்ப நல்லா இருக்கு.டிரை பண்ணி பாக்குறேன்.உங்க போட்டோவ பாத்தேன்.அழகு,அருமை.

ஸாதிகா said...

பார்க்கவே ரெட்டிஸ்ஸா அழகாக் இருக்கின்றது.படத்தை சிறிது பண்னிப்போடவும்.ஒப்பன் ஆவதற்கு நேரம் எடுக்கின்றது.

Pavithra Srihari said...

super kaara kolambu ammu ... murungaikaila romba puthusu .. The way u have presented is awesome ...

SathyaSridhar said...

Ammu,,murungaikai kaara kuzhambhu rombha nalla irukku paa,,,nalla ennai mithakka apdiye paarkum poedhae echil ooruthu rombha kaimanathoeda pakkuvama senjurukkeenga...

Ms.Chitchat said...

Yum yum kaara kozhambu. Would love to try it but with less karam :):)Click is very good.

Meena said...

I could eat a bowl-ful of this kuzhambu all by myself...i make a similar kathirikkai kuzhambu.

Aruna Manikandan said...

Super Kolumbhu!!!!
My favorite dear :-)

Mrs.Menagasathia said...

நல்ல கலரா சூப்பரா இருக்கு அம்மு!!

Padma said...

Looks really mouthwatering... perfect kuzhambu with hot rice and appalam.

Krishnaveni said...

delicious

ஸ்ரீராம். said...

மெழுகுவத்தியை ஏத்தி வச்சி வெங்காயம் உரிச்சாலும், ஃ ப்ரீசர்ல வச்சு எடுத்து உரிச்சாலும் கண்ணீர் வராதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். கொதிக்க வைக்குமுன்பு கொஞ்சம் வெல்லம் நெல்லிக்காயளவு சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்

Padhu said...

Nice and yummy ! I want to have it with hot rice now. mmmmmmmmm

Pavithra said...

Paarkave vaai ooruthu ...yummy.

Jaleela said...

. செட்டிநாடு காரக்குழம்பு பார்க்கவே அருமையா இருக்கு

Ammu Madhu said...

நன்றி சித்ரா..

Ammu Madhu said...

நன்றி பாத்திமா:)..ரொம்ப நாளா உங்களை என் ப்ளாக் பக்கம் காணும்?கண்டிப்பா செஞ்சு பாருங்க.அடிக்கடி வாங்க.

Ammu Madhu said...

இனிமேல் போடும் படங்களை சிறிது பண்ணி போடறேன் ஸாதிகா..நன்றி.

Ammu Madhu said...

நன்றி பவித்ரா

Ammu Madhu said...

ரொம்ப நன்றி சத்யா.கண்டிப்பா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

நன்றி சிட்சாட்:))எனக்கு காரம் போட்டு தான் சாப்ட்டு பழக்கம்:)காரமா இல்லைனா உள்ள இறங்காது:)))

Ammu Madhu said...

நன்றி மீனா..பொதுவா செட்டிநாடு பக்கம் இதே போல் செய்வாங்க..

Ammu Madhu said...

நன்றி அருணா.

Ammu Madhu said...

நன்றி மேனகா.

Ammu Madhu said...

நன்றி பத்மா..

Ammu Madhu said...

நன்றி கிருஷ்ணவேணி.

Ammu Madhu said...

நன்றி ஸ்ரீராம்..எனக்கும் வெல்லம் சேர்ப்பது பிடிக்கும்.ஆனால் இந்த காரகுழம்பிற்கு சேர்த்து செய்ததில்லை.அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

Ammu Madhu said...

நன்றி padhu.

Ammu Madhu said...

நன்றி பவித்ரா,

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா.

LK said...

//உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.//

ithuthanga mukkiam

Julietjoy said...

Hmmmmmm...... Its very nice to have with hot rice.....

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?