Wednesday, April 7, 2010

வாழைக்காய் கார கறி(HOT version)தேவையான பொருட்கள்:
======================

வாழைக்காய் - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
சிகப்பு மிளகாய் ஊறுகாய் - ஒரு டீஸ்பூன்(red chilli pickle)
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன் 
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன் 
நெய் - கால் டீஸ்பூன்(விரும்பினால்)

தாளிப்பிர்க்கு:
--------------------------

கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு  டீஸ்பூன் 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:
===========


* முதலில் வாழைக்காயை தோல்  சீவி வேக வைத்து நடுவாந்திர அளவில் நறுக்கி கொள்ளவும்.

* எண்ணையை காயவைத்து தாளிப்புக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிவக்க வறுக்கவும்.

* பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வாழைக்காய் சேர்த்து சிகப்பு மிளகாய் தூள் சேர்த்து மூடி வைத்து எல்லாம் ஒன்று சேரும் வரை வரை வதக்கி இறக்கவும்.

* கால் டீஸ்பூன் நெய் மற்றும் ஊறுகாய்  சேர்க்கவும்.

* சுவையான காரசாரமான வாழைக்காய் கார கறி தயார்.

உங்கள் கருத்தை மறக்காமல் கூறவும்.

28 comments:

மன்னார்குடி said...

அருமை.

Ms.Chitchat said...

Super vazhaikaa curry. Loved the look of it and would like to have it with rice and sambar.

Pavithra Srihari said...

romba superaa irukku ... athoda andha poonai thaan romba cute ...

srividhya Ravikumar said...

Wow.. looks awesome.. do drop in at my site whenever.. following you

sarusriraj said...

நல்ல காரசாரமான வறுவல் , ஊறுகாய் சேர்ப்பது புதிது டிரை பண்ணி பார்க்கிறேன் .. your presentation looks cute.

பித்தனின் வாக்கு said...

ஆகா வாழைக்கறி பிரமாதம். ஆனா இப்ப எல்லாம் வாழைக்காயைப் பார்த்தால் போதும் வாயுப்பிடிப்பு ஞாபகம் வந்து விடுகின்றது. ரைத்தா கூட அருமையாக உள்ளது.

jeyashrisuresh said...

semma hot curry.

SathyaSridhar said...

Ammu,,, vazhaikai kariyum super unga poona kutty um super

ஸ்ரீராம். said...

Simple. படத்தைப் பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது..

Ramya said...

nalla irukku!!unga presentation um romba azhaga irukku

Krishnaveni said...

Excellent dish and nice presentation

Geetha Achal said...

சூப்பர்ப்...குட்டி பூனை அருமை...மிளகாய் ஊறுகாய் விற்கின்றதா...அல்லது சில்லி சாஸினை சொல்லுறிங்களா..ஆனால் எப்பொழுதும் போல different & spicy குறிப்பு...வாழ்த்துகள்...

ஸாதிகா said...

அம்மு உங்கள் ரெசிப்பியைப்பார்க்கறதை விட அலங்காரத்தைப்பார்ப்பதிலேயே ஆர்வம் அதிகமாகிட்டு வருது.உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி.வாழ்த்துக்கள்.

Valarmathi said...

Spicy and yummy one, looks delicious.

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

LK said...

அது எனன் சிகப்பு மிளகாய் ஊறுகாய் . கேள்வி பட்டது இல்லையே

செந்தமிழ் செல்வி said...

க்றி எங்கேன்னு தெரியலை. பொம்மை தான் கண்னைக் கவருது:-)

Porkodi (பொற்கொடி) said...

அம்மு, இன்னிக்கு தான் உங்க ப்லாக் பாக்கறேன்.. (ஆனா நீங்க என்னை என்னிலேர்ந்து ஃபாலோ பண்றீங்கன்னு தெரியல.. :O க‌மெண்ட் போட்ட‌தே இல்லியோ?!)

நிறைய ரெசிபி படிச்சு பாத்தேன் ஒரே மூச்சுல.. கலக்கலா இருக்கு! படத்தை பாக்கும் போதே டேஸ்ட் பாத்த மாதிரி இருக்குன்னா பாருங்க. உங்க ப்ரெஸன்டேஷன் ஒரு தனி கலை தான்! எப்ப‌டி இவ்ளோ பொறுமையா ப‌ண்றீங்க‌! மேலும் ச‌மைத்து அச‌த்த‌வும்.

இது போதாதுன்னு இந்து ம‌த‌ம், திருப்பாவைன்னு பின்றீங்க‌ நிஜ‌மாவே! பெஸ்ட் பெஸ்ட் விஷ‌ஸ்! அப்ப‌ப்போ நீங்க‌ செய்ய‌ற‌ மொக்கை விஷ‌ய‌ங்க‌ளையும் ப‌திவு ப‌ண்ணுங்க‌, இல்ல‌ன்னா அம்முவின் கணவர் படும் பாட்டை நாங்க‌ எப்ப‌டி தெரிஞ்சுக்கற‌து.. :)

Rohini said...

Romab cute a irukku Ammu.. Pakumbothe sapdanum pola iruku... Very tasty indeed!

Anonymous said...

Ammu supera irukudi un blog.alaga alaga decorate pani photo eduthuukka.ithula mattum unaku naraya porumai iruku:)))

Kalai said...

super poriyal! I liked nicely browned one of yours.

Uma said...

artistic presentation Ammu!

Viki's Kitchen said...

Superb valaikkai curry Ammu.Always my favorite. Your version and that cute picture are very nice.

Malar Gandhi said...

Ammu, vazhaikkai kaara kari padu super...ungha decoration adhai vida super:):)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Geetha Achal said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அம்மு...

Ammu Madhu said...

நன்றி மன்னார்குடி.

Pavithra said...

Ohhh this is looking cute and i loved adding pickle to make the curry , nice idea.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?