Friday, May 7, 2010

மாம்பழ கார குழம்பு


தேவையான பொருட்கள்:
=========================
பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு  டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்

எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:
=====================================
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
============
* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.

* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.

* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.


குறிப்பு:
=======

மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.

49 comments:

Chitra said...

ஆஹா..... ஆஹா...... :-)

Mrs.Menagasathia said...

yummy recipe!!

அப்பாவி தங்கமணி said...

வாவ்... never heard of this... looks delicious... try பண்ணிற வேண்டியது தான்

SathyaSridhar said...

Ammu,,epdi irukkeenga paa... mambhaza kaara kuzhambhu super ah irukkae vidyasamana kara kuzhambu paa..neenga sonna maadiri inippum pulippum kalandu super ah irukkum.

Ammu Madhu said...

வாங்க சித்ரா.

Ammu Madhu said...

Thanks Menaka.

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க தங்கமணி.

Ammu Madhu said...

ரொம்ப நல்லா இருக்கேன் சத்யா.உங்க வீட்டில் அனைவரும் நலமா?கண்டிப்பா செஞ்சு பாருங்க.

அமைதிச்சாரல் said...

நல்லா இருக்குங்க. மாம்பழ புளிசேரி செய்வேன். காரக்குழம்பையும் செஞ்சுபார்க்கணும்.

Kanchana Radhakrishnan said...

super Ammu

padma said...

ப்ளாக் ரொம்ப அழகா இருக்கு அம்மு
குழம்பும் looks yummy .
ட்ரை பண்ணுவேன்

Geetha Achal said...

வித்தியசமாக இருக்கின்றது....அருமை...

Ann said...

Wow.. this sounds so delicious.

Jay said...

Hy Ammu,

wonderful look and delicious recipe! Is really excellent.

Ammu Madhu said...

Thanks kanchana.

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க அமைதிசாரல்.

Ammu Madhu said...

நன்றி பத்மா.கண்டிப்பா செஞ்சு பாருங்க.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா.

Ammu Madhu said...

It sure is ann.Do try it sometime:)

Ammu Madhu said...

Thanks jay..it really is encouraging.

தக்குடுபாண்டி said...

அம்மு மேடம், மாம்பழகுழம்பு நன்னாதான் இருக்கு...:)

Gita Jaishankar said...

Nice presentation Ammu...it looks yummy :)

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தக்கடு.நன்னா தான் இருக்கும் பாக்க மட்டும் இல்ல ருசியும் அமோகமா இருக்கும்.குழம்பு செஞ்சு பாருங்கோ:)))

Ammu Madhu said...

Thanks gita.

vanathy said...

Ammu, looking yummy. I never heard about this recipe. Very nice presentation.

Ammu Madhu said...

Thanks vanathy.

Anu said...

Looks delicious and yummy... Mangoes my all time fav...

Ammu Madhu said...

Thanks Anu.

மகி said...

நல்லா இருக்கு அம்மு! சம்மர் வந்ததும் மாம்பழமா சமைக்கறீங்க போல. :)

பாத்திமா ஜொஹ்ரா said...

it's different,wow

Ms.Chitchat said...

Arumaiyana kozhambu. Loved ur version.

Jaleela said...

மாம்பழ கார குழம்பு பார்க்கவே ஆளை இழுக்குது

Ammu Madhu said...

அமாம் மகி;)தினமும் ஒரு பண்டமாவது மாம்பழத்தில் செய்து விடுவேன்;)I love Mango almost in everything.

Ammu Madhu said...

Thanks Fathima.

Ammu Madhu said...

Thanks Chitchat.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா.கண்டிப்பா செஞ்சு பாருங்க.

Krishnaveni said...

delicious curry and tempting too

Ammu Madhu said...

Thanks Krishnaveni.

RAKS KITCHEN said...

Wow,I love this kuzhambu a lot! Long time since I had this! Looks mouthwatering!

Ammu Madhu said...

Thanks rakh.

Mano Saminathan said...

A very different kuzhambu. I think that the fried powder will enhance the taste very much. Very beautiful photograph also!

Ammu Madhu said...

Thanks mano madam.

Viki's Kitchen said...

Superb karakulambu. Arumaiya irukku Ammu.

Ammu Madhu said...

Thanks viki.

அஹமது இர்ஷாத் said...

Tasty Receipe... Nice..

ஸாதிகா said...

மாம்பழத்தில காரக்குழம்பு.பார்க்கவே நன்றாக இருக்கு அம்மு.டெகரேஷனும் ஏ ஒன்.வாழ்த்துக்கள்

Ammu Madhu said...

Thznks Ahmed.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ஸாதிகா.

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

welcom dear
v nice dear great
A hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world. all the best keep in touch always
Warm regards,
mohan
www. mohanblueginger.blogspot.com
http://www.mohanblueginger.wordpress.com

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?