Tuesday, May 11, 2010

பூரி-உணவகத்தில் செய்யும் முறைதேவையான பொருட்கள்:
========================

கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்+ஒரு டீஸ்பூன்
சீரக பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.

செய்முறை:
============

* கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

* நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.

* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.

* ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம்  வைக்கவும்.

* எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)

* எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.

* இப்படி செய்வதால் உணவகத்தில் தரும் பூரியை போல puff ஆக உதவும்.


* ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.

* இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.

* சுவையான பூரி தயார்.
இந்தபூரி கடைசிவரை அதுவே அமுங்காது.

49 comments:

Pavithra said...

Looks yummy and puffy.. thanks for sharing.

Jaleela said...

அம்மு ரொம்ப நல்ல இருக்கு, ஏன் சீரகப்பொடி சேர்க்கனும், ஹோட்டலில் சீரகதூள் சேர்ப்பர்களா?

எங்க வீட்டில் எல்லோரும் பூரி பிரியர்கள் வாரத்தில் இரு முறை பூரி தான். நேற்று இரவு கூட் பூரி சொன்னா தான்

Ammu Madhu said...

ஆமாம் அக்கா நேற்று தான் "thali" என்ற உணவகத்திலிருந்து குறிப்பு வாங்கினேன்.சீரக பொடி சேர்ப்பதால் நல்ல smella இருக்கு பூரி.

Priya said...

Poori nandraga vanthullathu...

ராஜ நடராஜன் said...

சீரகப் பொடி!யாரும் சொல்லவேயில்ல.

Aruna Manikandan said...

Poori supera irruku ammu...
Adding jeeraka podi sounds new to me...

Mrs.Menagasathia said...

super puffy puri!!

Jay said...

Hy dear,

love pooris...happy to know the secret of restaurant poori..thanks.

asiya omar said...

பூரி இப்படியே புஃப்ன்னு நிறைய நேரம் இருக்குமா ?நான் பூரி செய்தால் கொஞ்ச நேரம் தான் புஃப்,பின்பு அமுங்கி விடும்.அருமை.சீரகப்பொடி புதுசாக இருக்கே.

Geetha Achal said...

சூப்பராக இருக்கின்றது...அருமையான பூரி...

சீரக் பொடி சேர்ப்பது புதுசு...கண்டிப்பாக செய்து பார்கிறேன்...

அருமை...

நட்புடன் ஜமால் said...

சீரகம் நல்ல வாசனை தரும் தான்...


இவ்வளவு பஃப்ஃபியாவா அருமைங்க.

vanathy said...

Wow! poori looks like restaurant poori. I will try this very soon. Nice one.

மகி said...

/இந்தபூரி கடைசிவரை அமுங்காது/ :)))) அப்படியா அம்மு? அப்ப எப்படி சாப்பிடறது? :))))

பூரி சூப்பரா இருக்கு..நானும் சீரகப் பொடி சேர்த்து செய்து பார்க்கிறேன்.

தக்குடுபாண்டி said...

Puffy poori suuuuperaa irukku akka! ரூம் போட்டு யோசிப்பேளோ???...:)

ஸாதிகா said...

சீரகப்பொடி யெல்லம் போட்டு..டிரை பண்ணுகின்றேன்

Gita Jaishankar said...

Nice puffy puris ...looks so good :)

அப்பாவி தங்கமணி said...

சீரகப் பொடி is new to me. Looks so nice. I heard about white rava to be added a little to keep it puffy for long time. But the problem with white rava is if you eat after sometime, poori becomes hard. சீரகப் பொடி looks like a good option. I will try this. Thanks Ammu

Ann said...

Wow.. Romba arumaiya seithirukinga.. Pakkavea aasaiya iruku.

Thilaga .I said...

சீரகம் சேர்க்கும் யோசனை சிறப்பு.
படங்கள் அழகாக இருக்கிறது..

சர்க்கரை சேர்ப்பதால் சுவை மாறிவிடாதா..
அம்மு..?

Krishnaveni said...

nice idea to use cumin powder...sure to try...thanks ammu

Ammu Madhu said...

Thanks pavithra.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா.

Ammu Madhu said...

இப்ப தான் நான் சொல்லிட்டேனே ராஜ நடராஜன்.

Ammu Madhu said...

நன்றி அருணா.நான் இந்த குறிப்பு எனக்கு கிடைப்பதற்கு முன்னாடி முழு சீரகம் சேர்ப்பேன்.பொடி சேர்ப்பது எனக்கும் புதிது தான்

Ammu Madhu said...

Thanks menaga.

Ammu Madhu said...

Thanks jay.

Ammu Madhu said...

நன்றி ஆசியா.இது அமுங்காது நாம சாப்பிடும்போது பிக்கிற வரிக்க.:)
"மாவின் அளவும் தேய்க்கும் அளவும் சரியாக இல்லையென்றால் என்னை குடித்து விடும்.அதனால் கவனமாக செய்யணும்" னு குறிப்பு குடோத்தப்போவே எனக்கு சொன்னாங்க.

Ammu Madhu said...

நன்றி ஜமால் . சீரக பொடி சேர்ப்பதால் தான் puffya இருக்குனு சொல்ல முடியாது.மாவை சமமாக தேய்ப்பதும் கோதுமை மைதா அளவும்,தரமும் தான் காரணம்.சீரக பொடி ஒரு ப்ளேவருக்குத்தான்..

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க கீதா அக்கா.

Ammu Madhu said...

Thanks vanathy.

Ammu Madhu said...

மாத்திட்டேன் மகி:)எப்பா எப்புடினா யோசிக்கறாங்க:)நன்றி மகி.

Ammu Madhu said...

தக்குடு இதுக்கு எதுக்கு ரூம் போட்டு யோசிக்கணும்?
ரெஸ்டாரெண்ட்டுல சாப்டுட்டு பூரி பண்ணின செப்ட போய் இந்த மாறி பூரிய நான் சாப்டதே இல்ல அவளவு நல்லா இருந்துச்சுனு சொன்னா அவரே recipe எழுதி குடுத்துட போறார்.:)

Ammu Madhu said...

சீரக பொடி பிடிக்கலேன்னா அது போடாமலும் ட்ரை பண்ணுங்க ஸாதிகா.

Ammu Madhu said...

Thanks gita.

Ammu Madhu said...

தங்கமணி ரவா சேர்ப்பது மொறுமொறுப்பாக தான்,ரவையினால் puffyyaka வராது.சீரக போய் வெறும் ப்ளேவருக்குதான்.மாவின் தரமும் சரியான அளவும்.தேய்க்கும் பதமும் தான் puffyya வருவதற்கு காரணம்.

Ammu Madhu said...

நீங்களும் செஞ்சு பாருங்க Ann.

Ammu Madhu said...

திலகா சர்க்கரை ஒரு சிட்டிகை தானே சேர்க்கிறோம்.சர்க்கரை சேர்ப்பதால் மாவின் பதம் லேசாக இறுகும்.தேய்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.

Ammu Madhu said...

Thanks krishnaveni.

Ammu Madhu said...

Thanks jaleela akka.

Ammu Madhu said...

எங்க வீட்டிலும் பூரி சென்னா னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் ஜலீலா அக்கா.எனக்கு பூரி அவ்வளவாக பிடிக்காது:)பதூரா ரொம்ப பிடிக்கும்.

Krishnaveni said...

Ammu, i tried this puri...came out very well. we loved the jeera flavour....has become our family's fav

Ammu Madhu said...

கிருஷ்ணவேணி கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.மிக்க நன்றி.

Padhu said...

very nice and puffy puri

Ammu Madhu said...

Thanks padhu.

r.v.saravanan said...

நல்லாஇருக்கு

Ammu Madhu said...

நன்றி சரவணன்.

mletchmi said...

மைதா மாவை ஆங்கிலத்தில் என்ன சொல்வாங்க?

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

ammu ur cooking v nice i like it

im mohan right now swiss hospitality industry kitchen arts of kuwait

Giancarlo said...

un felice week end per Te...ciao

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?