Friday, May 21, 2010

பல்கர் உப்மா.

பல்கர் உப்மா என்றால் என்னவென்றே எனக்கு போன மாதம் வரை தெரியாது.எங்க வீட்டில் கொதுமைரவை தோசை செய்வது தான் பழக்கம். பிறகு கீதா அக்காவின் ப்ளாக்கில் குறிப்பு  பார்த்து பல்கர்  வாங்கி அவர்களின் முறையில் சிறிது மாற்றம் செய்து உப்மா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.என் தளத்தில் என் சொந்த குறிப்புகள் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தேன்.இன்று முதல் Friends recipes என்ற தலைப்பின் கீழ் மற்ற சமையல் ப்ளாக்கிலிருந்து செய்து பார்த்து எனக்கு மிகவும் பிடித்த குறிப்புகளை வெளியிட உள்ளேன்.
கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.
நான் செய்து பார்த்து வெளியிட்டது கீழே.


தேவையான பொருட்கள்:
========================
பல்கர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - நான்கு
Fresh மொச்சை பயறு(not dried one) - ஒரு கப் 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப்
வெந்தய கீரை - மன்று டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலகடலை  - ஒருடேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை 

செய்முறை:
============




* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கடலை பருப்பு,உளுந்து,நிலக்கடலை சேர்த்து வறுத்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* நருக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி வெந்தய கீரை சேர்த்து தணலை மீடியம்மில் வைத்து வதக்கவும்.

* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

* மொச்சையை முக்கால் பங்கு வேக வைத்து நீரை வடித்து கொள்ளவும்.

* கீரை லேசாக வதங்கியதும் வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மொச்சை சேர்த்து வதக்கி உப்பு,சர்க்கரை சேர்த்து இரண்டு கப் நீர் சேக்கவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரமித்ததும் பல்கர் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி நீர் வற்றியதும் 
  தணலை அணைத்து சூடாக பரிமாறவும்.

* சுவையான பல்கர் உப்மா தயார்.


பி.கு:
--------
தலைப்பில் பல்கர் உப்மா என்று போட்டுள்ளேன் டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள்  கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.

கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.

49 comments:

Chitra said...

பி.கு:
--------
தலைப்பில் பல்கர் உப்மா என்று போட்டுள்ளேன் டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.


......ha,ha,ha,ha,ha.... You have a great sense of humor. :-)

ராஜ நடராஜன் said...

என்னது பல்கர் பத்தி போன மாசம்தான் தெரியுமா?அவ்வ்வ்வ்வ்வ்!

ராஜ நடராஜன் said...

//தலைப்பில் பல்கர் உப்மா என்று போட்டுள்ளேன் டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.//

ஒரே உப்பு மா!

Ammu Madhu said...

:-)பல்கர் உப்மா பத்தி னு சொல்ல வந்தேன்.இப்போ ஆட் பண்ணிட்டேன்.

Ammu Madhu said...

எங்க வீட்லலாம் தோசை தான் செய்வார்கள் கோதுமை ரவை வைத்து.பல்கர் உப்மா நான் கேள்வி பட்டதே இல்ல

Ammu Madhu said...

நன்றி சித்ரா..

Ammu Madhu said...

கொஞ்சம் சக்கரை,மிளகாய் தூள் கொடுக்கவா ராஜ நடராஜன்.:-)

Ammu Madhu said...

தப்பு கண்டுபிடிக்கர்துலையே குறியா இருக்காங்கப்பா..

Priya said...

Ammu Such a lovely presentation dear.
//என்னது பல்கர் பத்தி போன மாசம்தான் தெரியுமா?அவ்வ்வ்வ்வ்வ்//
enakum theriyathu.elarukku terinjurukanuma?

shama nagaraj said...

First recipe enodatha irukumnu nenachen ammu emathitengale:(
aduthu enoda recipi varanum ilati unga votuku auto varum BE CAREFUL.

kirthiga said...

Post recipes frequently ammu.how is your health now?Take some rest.

kirthiga said...

BTW wonderful presentation and adding mochai in this upp(u)ma is a great thought.

ராஜ நடராஜன் said...

//Ammu Such a lovely presentation dear.
//என்னது பல்கர் பத்தி போன மாசம்தான் தெரியுமா?அவ்வ்வ்வ்வ்வ்//
enakum theriyathu.elarukku terinjurukanuma? //

மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

Aruna Ravi said...

creative idea of encouraging others.good one ammu.
//பி.கு:
--------
தலைப்பில் பல்கர் உப்மா என்று போட்டுள்ளேன் டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.


......ha,ha,ha,ha,ha.... You have a great sense of humor. :-)//

REPEATTEI...

ammu un blogla en id vachu sign in pana mudiyalada enanu paru.

Ammu Madhu said...

:-)எல்லாருக்கும் தெரிஞ்சுருகனும்னு அவசியம் இல்ல ப்ரியா.பல்கர்னா கோதுமை ரவை தான்.உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே?ப்ரியா கீதா அக்கா ப்ளாக் ல போய் பாருங்க பல்கர்னா என்னனு தெளிவா எழுதிருப்பாங்க.

Ammu Madhu said...

மனிச்சுருங்க ஷாமா..அடுத்த குறிப்பு உங்களோடது தான்.உங்க குறிப்பில் சில சந்தேகங்கள் இருந்ததே!!மின்னஞ்சல் பார்க்கவும்.

Ammu Madhu said...

ஹே..தாங்க்ஸ் கீர்த்தி.ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்க என் தளத்திற்கு.Special Warm Welcome.
இப்போ கொஞ்சம் ஓகே.

Ammu Madhu said...

Thanks keerthi.

Ammu Madhu said...

ஏன் பண்ண முடிலன்னு தெரிலையே..முதல்லில் கூகிளில் சைன் இன் பண்ணிட்டு அப்புறம் இதில் கமெண்ட் கொடுக்க ட்ரை பண்ணுங்க அருணா.

நட்புடன் ஜமால் said...

பல்கர் இதுவரை நான் கேள்வி பட்டதில்லை ...

சமையல் குறிப்புகளிலையும் காமெடி சேர்ப்பது சூப்பர் :)

Ammu Madhu said...

பல்கர் என்றால் கோதுமை ரவை தான் ஜமால்...கோதுமையை வேகவைத்த பின் உடைத்தால் பல்கர்.வேக வைக்காமல் உடைத்தால் கோதுமை ரவை..நன்றி.

Uma said...

Hey Ammu! How are you?

bulgur upma is new for me.. worth trying!
mango kesari looks temting with that presentation.

LK said...

ஏற்கனவே படித்ததுதான். இருந்தாலும் அந்த கடைசி லைன் அருமை. என்ன பண்ண இப்படிலாம் போட்டதன் பொழைக்க முடியும். இல்லடி கும்மி அடிச்சிடுவாங்க

ஸாதிகா said...

//என் தளத்தில் என் சொந்த குறிப்புகள் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தேன்.இன்று முதல் Friends recipes என்ற தலைப்பின் கீழ் மற்ற சமையல் ப்ளாக்கிலிருந்து செய்து பார்த்து எனக்கு மிகவும் பிடித்த குறிப்புகளை வெளியிட உள்ளேன்.
கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு//நல்ல விஷயம்.பாராட்டுக்கள் அம்மு.மிளகாய் வற்றலை இவ்வளவு அழகாக அழகு படுத்த முடியுமா?வாவ்...

ஸ்ரீராம். said...

சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்"//

முன் ஜாக்கிரதை முத்தம்மா...?!!

Mrs.Menagasathia said...

Nice presentation & super upma!!

Chitra said...

Enakkum indha name pudhusu thaan.nice :)

Nandini said...

Romba arumaiyana upma!

Ammu Madhu said...

Thanks uma.

Ammu Madhu said...

:-)நன்றி எல்கே.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ஸாதிகா.

Ammu Madhu said...

தங்களின் பட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

Ammu Madhu said...

Thanks menaga.

Ammu Madhu said...

Thanks chitra.

Ammu Madhu said...

நன்றி நந்தினி.

asiya omar said...

பல்கர் உப்புமா செய்த விதம் அருமை.

Ammu Madhu said...

Thanks asiya.

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

Ammu Madhu said...

மிக நன்றி ஜெய்லானி.இவ்வளவு அழகான விருதை எனக்கும் தந்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

priya said...

hi dear,

There is an award waiting for u in my blog!!..please collect it!

Priya said...

Wat a healthy bulgur upma, kalakitinga Ammu, yennaku romba pidicha upma, fabulous presentation..

Geetha Achal said...

தங்களுடைய பல்கர் உப்மா மிகவும் சூப்பராக இருக்கின்றது...என்னுடைய குறிப்பினை முதலில் ட்ரை செய்தமைக்கு மிகவும் நன்றிகள் பல...வாழ்த்துகள்...

Ammu Madhu said...

Thanks Priya.

Ammu Madhu said...

Thanks priya.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா.

r.v.saravanan said...

என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி
உங்கள் தளத்தில் மெனுக்கள் நன்றாக உள்ளது
வாழ்த்துக்கள் இனி உங்கள் தளத்தில் தொடர்வேன்

Ammu Madhu said...

நன்றி சரவணன்.

Mahi said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் அம்மு! :)

//டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.// ஹா..ஹா..ஹா!! அம்மு இந்த சில பல நல்லவர்கள் லிஸ்ட்ல நான் இல்லவே இல்லை தானே? ;) பூரிக்கு நான் போட்ட கமெண்ட் ஒரு நேமாலஜியவே உருவாக்கிடுச்சுன்னெல்லாம் சொல்லமுடியாதில்ல? :)

பல்கர் உ'ப்'மா நல்லா இருக்குங்கோ.:)))))

Soumya said...

Very healthy and delicious upma...excellent presentation...great..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?