Wednesday, May 5, 2010

European Style Mashed Potatoes

தேவையான பொருட்கள்:
========================
யுகான் கோல்ட் பொடேடோஸ் - மூன்று
Soar Cream / Whipping Cream - அரை கப்
பட்டர் - ஒரு ஸ்டிக்/ஐந்து டேபிள்ஸ்பூன்
Whole Milk - கால் கப்
மிக பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
===========

* முதலில் உருளை கிழங்குகளை நன்றாக கழுவி தோல் உரித்து கொள்ளவும்.

*  நடுவாந்திர சதுரங்களாக நறுக்கி நீரில் போட்டு நறுக்கிய பூண்டையும் சேர்த்து  வைக்கவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு நீர் விட்டு 1/8  டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் உருளை கிழங்கை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

* Fork tender/கைகளால் மசித்தால் கட்டி இல்லாமல் மசியும் பதம் வந்ததும் நீரை வடிகட்டி Potato Masher உபயோகித்து கட்டி இல்லாமல் மசித்து கொள்ளவும். potato masher இல்லையென்றால் அகப்பை உப்பயோகித்து மசித்து கொள்ளவும்.

* பாலையும்,கிரீமையும் ஒன்றாக கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

* உருளை கிழங்கு மசித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கிரீம் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.தணலை மிக குறைவாகவே probably in 2 or 3 வைக்கவும்.

* வெண்ணையையும்  உருளையுடன் சேர்த்து உருக விடவும்.

* வெண்ணை எல்லாம் உருகியதும் மிளகு தூள் சேர்த்து  எடுத்து சூடாக பரிமாறவும்.

* சுவையான Mashed Potatoes தயார்.

* சாப்பிடும் முன்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

குறிப்பு:
========

ஐரோப்பியா,அமேரிக்கா,இத்தாலி,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மதிய உணவில் கண்டிப்பாக Mashed Potatoes இடம்பெறும்.
வெண்ணைக்கு பதிலாக நெய் உபயோகிக்க கூடாது.
வெண்ணையை உருளையில் சேர்க்கும் முன்பு தனி அடுப்பில் வைத்து உருக்கி சேர்க்ககூடாது.அதற்க்கு பதிலாக உருளையில் சேர்ப்பதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னாடி உளிர்சாதன பெட்டியில் இருந்தது வெளியில் எடுத்து வைக்கலாம்.
வீட்டில் தயாரித்த வெண்ணையை விட கடையில் வாங்கும் வெண்ணையை வைத்து செய்தால் தான் ருசி சரியாக வரும்.
உப்பு மிக குறைந்த அளவே தேவைப்படும்.
உருளையை அடுப்பில் வைத்து அதிக நேரம்  கிளறிக்கொண்டே இருக்க கூடாது வெண்ணை உருகி உருளையுடன் சேர்ந்த உடன் இறக்கி விட வேண்டும்.
எல்லாம் சரியாக வந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
இதில் உருளையை அரைக்க கூடாது மென்மையாக வர வேண்டும் என்பதற்காக.

25 comments:

Pavithra said...

I love mashed potato.. looks good ammu..

Krishnaveni said...

My fav. mashed potatoes. perfectly done. looks great

நட்புடன் ஜமால் said...

எந்த வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ?

Mrs.Menagasathia said...

super!! one of my favourite!!

Jay said...

This dish looks super yummy...!

Ammu Madhu said...

ஜமால் நக்கல் அடிக்கிறீங்களா?இல்ல நிஜமாவே கேக்கறீங்களா?:)))
நான் நிஜமாவே பதில் சொல்றேன்.பொதுவா ஆறு வயசு குழந்தைலேந்து எழுபது வயது குழந்தை வரை சாப்டலாம்:)இதில் அதிக பட்டர் இருப்பதால் ஆறு வயதுக்கு கீழுள்ள எழுபது வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானமாக கஷ்டபடுவார்கள் என்று கேள்விப்பட்டேன்.
Source:Google

Ammu Madhu said...

Jamaal mainna ithu US,Uk,Italyla part of luncha saapduvaanga.

Geetha Achal said...

இது அக்ஷதா குட்டி பிடித்த ஒன்று...இதனை நான் அவளுக்கு 8 மாதம் குழந்தையாக இருந்த பொழுதில் இருந்து கொடுக்கின்றேன்...ஆனால் பூண்டு சேர்த்ததில்லை...அடுத்த முறை பூண்டு சேர்த்து பார்க்கிறேன்...எனக்கும் இந்த மஸ்டு உருளை மிகவும் பிடிக்கும்...இதனை கிரேவியுடன் KFCயில் கொடுப்பாங்க....மிகவும் சூப்பராக இருக்கும்...

Priya said...

எனக்கு பிடிக்கும் இந்த‌ mashed potato!
Thanks for sharing!

அப்பாவி தங்கமணி said...

yummy... yummy... thanks

Ammu Madhu said...

Thanks pavi.

Ammu Madhu said...

Thanks krishnaveni.

Ammu Madhu said...

Thanks Menaga.

Ammu Madhu said...

Thanks jay.

Ammu Madhu said...

ஓ அப்டியா கீதா அக்கா?எட்டு மாதத்திலிருந்து சாப்பிடலாமா?நான் ஆறு வயது முதல்னு கூகிள்ல பாத்தேன்.அதான் ஜமால் கேட்டப்போ சொன்னேன்.:)ஜமால் ஆறு மாதம் முதல் சாப்பிடலாமம்.:))

Ammu Madhu said...

Thanks priya.This s my fav one too.

Ammu Madhu said...

Thanks thangamani.

Thilaga .I said...

You have wonderful creativity.
This recipe is very nice.
Everyone will like it..
Thanks for sharing.

(Your blog-design is superb)

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு கிரில் அயிட்டம் செய்யும் போது செய்து பார்க்கீறேன்.

Jaleela said...

அரைத்தா? பொடித்தா?

போடு வையுங்கள் இங்கேயெ வந்து பார்கிறேன்.

Jaleela said...

இதில் பூண்டு எப்ப சேர்க்க்னுமுன்னு சொல்லல பாருங்கள்

Ammu Madhu said...

ஜலீலா அக்கா பூண்டு உருளை வேக வைக்கும் பொழுதே சேர்க்கவேண்டும்..
அரைத்ததா போடித்ததா என்றால் புரியவில்லையே.

Ammu Madhu said...

Thanks so much thilaga

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க ஜலீலா அக்கா.

Jaleela said...

ஒகே பா இரண்டாவது பாயிண்டை சரியா படிக்கல,

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?