Monday, May 25, 2020
New site announcement 🙏Please support💪
நண்பர்களுக்கு 👭👬👫 வணக்கம்🙋 தவிர்க்க முடியாத நிலையில் சில வருடங்களுக்கு இத் தளத்திற்கு வர முடியாமல் போனது. 🙏இந்த ப்ளாக் ஆரம்பத்தில் இருந்தே என்னை மிகவும் பாராட்டி உற்சாகப்படுத்திய நீங்கள் அனைவரும் எனது புதிய
Instagram📷:
www.instagram.com/chillingarlicky யையும்
Facebook id :
https://www.facebook.com/pg/Chillingarlicky-107801267617324/about/
இவ்விரண்டையும் follow செய்து அதில் வரும் ரெசிபி யை செய்து பார்த்து என்னை உற்சாகப்படுத்த வேண்டு கிறேன் 🙏
நன்றி 🙏💕
Tuesday, May 25, 2010
சௌ சௌ கூட்டு
தேவையான பொருட்கள்:
========================
சௌ சௌ - இரண்டு
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கால் டீஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு :
================================================
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு:
----------------------
தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
===========
* சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.
* நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும்.
* பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதை தாளித்து கூட்டில் கொட்டவும்.
* மிளகு சீரக பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
* தேங்காய் வறுத்து சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் இந்த கூட்டு.
Reactions: |
Friday, May 21, 2010
பல்கர் உப்மா.
பல்கர் உப்மா என்றால் என்னவென்றே எனக்கு போன மாதம் வரை தெரியாது.எங்க வீட்டில் கொதுமைரவை தோசை செய்வது தான் பழக்கம். பிறகு கீதா அக்காவின் ப்ளாக்கில் குறிப்பு பார்த்து பல்கர் வாங்கி அவர்களின் முறையில் சிறிது மாற்றம் செய்து உப்மா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.என் தளத்தில் என் சொந்த குறிப்புகள் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தேன்.இன்று முதல் Friends recipes என்ற தலைப்பின் கீழ் மற்ற சமையல் ப்ளாக்கிலிருந்து செய்து பார்த்து எனக்கு மிகவும் பிடித்த குறிப்புகளை வெளியிட உள்ளேன்.
கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.
நான் செய்து பார்த்து வெளியிட்டது கீழே.

தேவையான பொருட்கள்:
========================
பல்கர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - நான்கு
Fresh மொச்சை பயறு(not dried one) - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப்
வெந்தய கீரை - மன்று டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலகடலை - ஒருடேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
செய்முறை:
============
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கடலை பருப்பு,உளுந்து,நிலக்கடலை சேர்த்து வறுத்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* நருக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி வெந்தய கீரை சேர்த்து தணலை மீடியம்மில் வைத்து வதக்கவும்.
* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
* மொச்சையை முக்கால் பங்கு வேக வைத்து நீரை வடித்து கொள்ளவும்.
* கீரை லேசாக வதங்கியதும் வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மொச்சை சேர்த்து வதக்கி உப்பு,சர்க்கரை சேர்த்து இரண்டு கப் நீர் சேக்கவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரமித்ததும் பல்கர் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி நீர் வற்றியதும்
தணலை அணைத்து சூடாக பரிமாறவும்.* சுவையான பல்கர் உப்மா தயார்.
பி.கு:
--------
தலைப்பில் பல்கர் உப்மா என்று போட்டுள்ளேன் டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.
கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.
Links to this post
Labels:
friends recipes
Reactions: |
Subscribe to:
Posts (Atom)